அக்டோபர் 13|புரட்டாசி 27
தருமபுரி
தருமபுரி மாவட்டம் உக்காரநல்லி கிராம ஊராட்சியில் 11.10.2025ல் நடைபெற்ற கிராம சபை கூட்டம் கோரமில்லாமல் குறந்த பட்சம் கலந்து கொள்ள வேண்டிய வாக்காளர்கள் கலந்து கொள்ளலாமல் சட்ட விரோதமாக நடைபெற்றதை சுட்டிக் காட்டிய கிராம சபை கூட்டத்தில் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்மானம் கொண்டு வர முயன்ற சமூக ஆர்வலர் கோவிந்தசாமி என்பவர் மீது அரசு பணியை தடுத்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பல்வேறு சட்ட பிரிவுகளில் பொய் வழக்கு பதிவு செய்துள்ள தருமபுரி மதிக்கோன்பாளையம் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்.
கிராம சபை கூட்டம் ஒரு சம்பிரதாய அரசு விழா கிடையாது பஞ்சாயத்து ராஜ் சட்ட படி நடக்க வேண்டிய கூட்டம் அரசு ஊழியர்கள் விருப்பப்படி அரசியல் வாதிகள் விருப்பம்போல் நடத்திக் கொள்ள அரசியல் கூட்டம் கிடையாது கிராம பாராளுமன்றம் போன்ற அதிகாரமும் பொறுப்பும் கடமையும் கொண்ட கிராம சபை கூட்டத்தை கோரம் இல்லாமல் நடத்துவதற்கு யாருக்கு அதிகாரம் இல்லை இதை கேள்வி கேட்க கிராம சபை உறுப்பினர்களின் உரிமையை பறிக்கும் வகையில் காவல் துறை மூலம் பொய் வழக்கு கொடுத்த உள்ளாட்சித் துறை அதிகாரி மீது பொய் வழக்கு கொடுத்ததற்காக காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு பொய் வழக்கு கொடுத்த அரசு ஊழியர் மீதும் உடந்தையாக இருந்தவர்கள் மீதும் மிகக் கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்
- டாக்டர் நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்,
பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம்.

