அக்டோபர் 24|ஐப்பசி 07
தருமபுரி
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வள்ளி என்ற 38 வயது மதிக்கத்தக்க பெண் இறந்துள்ளார் இவர் மிகவும் ஏழ்மையில் நிலையில் வாழ்ந்து வந்துள்ளார் இறந்த இவரது புனித உடலை தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்துள்ளனர் ஏழ்மையில் இறந்த இவரது புனித உடலை நல்லடக்கம் செய்ய மை தருமபுரி அமைப்பினரை தொடர்பு கொண்டனர் காரிமங்கலம் காவல் நிலைய காவலர் கிருஷ்ணமூர்த்தி மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் அமைப்பாளர்கள் சண்முகம் சையத் ஜாபர் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர் மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 170 புனித உடலை நல்லடக்கம் செய்துள்ளனர் மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்.

