Type Here to Get Search Results !

நான்கு வழி சாலையாக மாற்றப்பட்ட சென்னை கிழக்கு கடற்கரை சாலை!! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள் ....

Arun Kumar J
அக்டோபர் 12|புரட்டாசி 26

2 மணி நேரம் மிச்சம்… சென்னை டூ நாகைக்கு ஈஸியா போகலாம்.. குஷியில் டெல்டா மக்கள்

Chennai Nagapattinam Highway : சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர், சிதம்பரம், சீர்காழி மற்றும் நாகப்பட்டினம் நோக்கி பயணிக்கும் நேரம் வெகுமாக குறையக் கூடும்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை 


சென்னை, அக்டோபர் 12 : சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர், சிதம்பரம், சீர்காழி மற்றும் நாகப்பட்டினம் நோக்கி பயணிக்கும் நேரம் வெகுமாக குறையக் கூடும். குறிப்பாக, நாகப்பட்டினத்திற்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக இரண்டு மணி நேரத்தை சேமிக்க முடியும். நாடு முழுவதும் சாலை போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மக்களிடையே சீரான போக்குவரத்தை ஏற்படுத்த நெடுஞ்சாலைகளை மத்திய அரசு விரிவுபடுத்தியும் வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் சாலைகளை விரிவாக்கம் செய்வதில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது.

அப்படி சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் முடியும் கட்டத்தில் உள்ளது. பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1,588 கோடியில் சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது. 38 கி.மீ நீளமுள்ள புதுச்சேரி – பூண்டியன்குப்பம் பாதையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியை முடித்துள்ளது. இதனால், சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான பயண நேரம் காரில் 7 மணி நேரத்தில் இருந்து. 5 மணி நேரமாகும், பேருந்தில் 9 மணி நேரத்தில் இருந்து 7 மணி நேரமாகவும் குறையக் கூடும். புதுச்சேரி – பூண்டியான்குப்பம் இடையேயான பணிகள் முடிவடைந்ததால், திருவான்மியூர் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான 300 கி.மீ கிழக்கு கடற்கரை சாலையில் 220 கி.மீ தூரத்திற்கான சாலைகள் நான்கு வழி சாலைகளாக அகலப்படுத்தப்பட்டுள்ளன.

இது டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களுக்கான சாலை இணைப்பை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. தற்போது முடிவுற்ற புதுச்சேரி – பூண்டியான்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை பிரிவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அக்டோபர் 13 ஆம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்
300 கிமீ தூரத்திற்கு கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் திட்டத்தின்  பகுதியாக 46 கி.மீ மரக்காணம் – புதுச்சேரி பாதையின் வழிச்சாலைப் பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.