Type Here to Get Search Results !

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Arun Kumar J

 அக்டோபர் 27|ஐப்பசி 10




தமிழகம் 


இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB) பணிபுரிய அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது டிகிரி தகுதிக்கு நிர்வாகி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன இந்தியா முழுவதும் மொத்தம் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன தமிழகத்தில் மட்டும் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.10.2025 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


பணியின் பெயர்: Executive 


காலியிடங்களின் எண்ணிக்கை: 348


கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 


வயதுத் தகுதி: 01.08.2025 அன்று 20 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 30,000


தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/ippblaug25/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு தற்போது தபால் அலுவலகத்தில் ஜி.டி.எஸ் எனப்படும் கிராம அஞ்சல் ஊழியர்களாக பணியாற்றி வருபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.