நவம்பர் 18|கார்த்திகை 02
பொம்மிடி
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் பொம்மிடி ரயில் நிலையம் எதிரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவரது பிரேதத்தை கைப்பற்றி ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்ததில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. தருமபுரி மாவட்டத்தில் ஆதரவின்றியும் ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடல்களையும் நகராட்சி அனுமதியுடன் நகராட்சி பச்சையம்மன் கோவில் மயானத்தில் மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் நல்லடக்கம் செய்து வருகின்றனர். இறந்த இந்த இளைஞரின் புனித உடலை தங்கள் உறவாக எண்ணி பொம்மிடி ரயில்வே காவல் நிலைய காவலர் சசிகுமார், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் 173 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர். மரணிப்பவர்களிடமும் மனித நேயம் பகிர்வோம்.
- மை தருமபுரி அமைப்பு

