நவம்பர் 07|ஐப்பசி 21
கடலூர்
பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் 05.11.2025 ந் தேதி இரவு 07.00 மணிக்கு போக்குவரத்து காவலர்கள் திரு. பாலகுரு மற்றும் திரு. கிருஷ்ணவேல் ஆகியோர் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது செல்வி என்பவர் தான் காடாம்புலியூர் அருகே உள்ள Indian oil Petrol bunk -ல் மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும் பணி முடித்து தனது வீட்டிற்கு பேருந்தில் நெல்லிக்குப்பம் செல்லும் பொழுது எங்கேயோ தனது மணி பர்ஸ் தவற விட்டதாகவும் அதில் ரூ. 4300/- பணம் மற்றும் இரண்டு ATM கார்டு, ஆதார் கார்டு உடன் தொலைத்து விட்டதாகவும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என தகவல் தெரிவித்து சென்றுவிட்டார். உடனே மேற்படி காவலர்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் மார்க்கெட் சாலைகளில் தேடிய பொழுது பண்ருட்டி ஆர்ச் கேட் அருகே சிவப்பு நிற மணிபர்ஸ் கிடைக்க அதில் அந்த பெண்மணி கூறியது போல ரூபாய் 4,300/-ஏடிஎம் கார்டு ஆதார் கார்டு இருக்க அந்தப் பெண்மணியை தேடி பண்ருட்டி பேருந்து நிலையம் சென்று உதவி ஆய்வாளர் திரு. தேவநாதன் அவர்கள் மூலமாக உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது


