நவம்பர் 25|கார்த்திகை 09
அரூர்
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அரூர் சட்டமன்ற தொகுதி தாசரஅள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளிமாணவன் K.கார்த்திகேயன்(எ) வெற்றிவேல் ஐதராபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் கலந்துக்கொண்டு முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார் அச்சிறுவனுக்கு தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மொரப்பூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் ETT.செங்கண்ணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் K. சென்னகிருஷ்ணன் தாசரஅள்ளி முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கநாதன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தீ. கோடீஸ்வரன் மற்றும் கழக முன்னோடிகள் உடனிருந்தனர்.


