நவம்பர் 03|ஐப்பசி 17
சென்னை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தகவல் பெறும் உரிமைச் சட்டம் (RTI) குறித்த விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதியைத் தற்போது உருவாக்கியுள்ளது தேர்வர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005-இன் கீழ் விண்ணப்பங்கள் மற்றும் முதல் மேல்முறையீடுகளை (First Appeals) இணையவழியில் அனுப்பலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான இணையதளம் https://rtionline.tn.gov.in/ தேர்வர்கள் இந்த இணையவழிச் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தேர்வர்கள் கையேடு மூலமாகப் (physical submission) விண்ணப்பங்கள் மற்றும் முதல் மேல்முறையீடுகளைத் தேர்வாணையத்திற்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு TNPSC அறிவுறுத்தியுள்ளது இந்த அறிவிப்பு 31.10.2025 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்

