Type Here to Get Search Results !

விசிக கட்சியில் மாவட்ட செயலாளர் பொறுப்புகளை அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்

Arun Kumar J

 நவம்பர் 03|கார்த்திகை 17





மாவட்டச் செயலாளர் நியமிக்கும் பணியை முடித்து இருக்கிறேன். அந்த 144 நபரில் சிலரை வேறு பொறுப்பிற்கு வழங்க வேண்டிய நிலையும் உள்ளது. இரண்டு ஒரு வருடங்களுக்குப் பின் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் தேவைப்பட்டால் கிளை செயலாளர்கள் வாக்குரிமை உரிமை பெற்று அவர்கள் ஓட்டுப் போட்டு மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் முறையை நாம் உருவாக்க வேண்டும். இரண்டு ஒரு நாட்களில் மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள் பட்டியலை நான் வெளியிட இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் எப்போதும் போல் நாங்கள் சிறுத்தைகள் என்று களப்பணியாற்ற வேண்டும்.



இரண்டு வருவாய் மாவட்டங்களுக்கு ஒரு மண்டல செயலாளார் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தோம். எப்போது அதில் ஒரு மாற்றம் எல்லாவற்றையும் தேர்தல் அதிகார எல்லையை கொண்டே வரையறை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். சட்டமன்ற தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர் நியமிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு மண்டல செயலாளர் என்ற அடிப்படையில் நியமிக்க இருக்கிறோம். இவ்விரண்டு  சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மண்டல துணைச் செயலாளர் நியமிக்கப்பட இருக்கிறார்கள் அப்படி பார்த்தால் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு மூன்று மண்டல துணைச் செயலாளர் நியமிக்கப்படுவார்கள்.


- எழுச்சித்தமிழர்
தொல்.திருமாவளவன் எம்.பி


எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.