டிசம்பர் 07| கார்த்திகை 21
தருமபுரி
சர்வதேச தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தன்னார்வலர்கள் குழு சார்பாக தன்னலமின்றி சேவையாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் மாவட்டம் வாரியாக சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் சேவை செம்மல் விருது 2025 சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் ஜெகநாதன் கலையரங்கில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக மனிதநேயமிக்க சேவைகளை கடந்த 13 ஆண்டுகளாக சிறப்பாக எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மை தருமபுரி அமைப்பினர் செய்து வருகின்றனர். தினந்தோறும் அன்னதானம் சேவை, ஆதரவற்று இறந்தவர்களின் புனித உடல் நல்லடக்கம், இரத்ததானம் சேவை, புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் விழிப்புணர்வு, மாற்றுத்திறனாளிகள் சேவை, இயற்கை தேசம், தன்னார்வலர் பணி, பேரிடர் கால உதவிகள் போன்ற சேவைகளை செய்து வருகின்றனர். மை தருமபுரி அமைப்பின் சேவைகளை பாராட்டும் விதமாக தமிழ்நாடு தன்னார்வலர்கள் சேவை செம்மல் விருது 2025 வழங்கப்பட்டது. இந்த விருதினை மின்சாரத்துறை தலைவர், முன்னாள் சுகாதாரத் துறை தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் இயக்குநர் பேராசிரியர் காமகோடி வீழிநாதன் ஆகியோர் கரங்களால் இந்த விருதினை மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் சண்முகம், சையத் ஜாபர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தமிழ்நாடு தன்னார்வலர்கள் குழு நிர்வாக இயக்குனர் ஹரி கிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினருக்கு மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் இயன்றதை இணைந்து செய்வோம், மனிதநேயம் காப்போம் மனிதநேயம் போற்றுவோம்.

