சும்மா பைக் அல்லது ஆட்டோவில் அழைத்து செல்லக்கூடிய, சின்ன சின்ன சிராய்ப்பு காயங்கள், சாதாரண காய்ச்சலுக்கு எல்லாம் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து தொந்தரவு செய்யாதீர்கள்.. இலவசம் என்றாலும் ஒரு எல்லை உண்டு.
வெட்டி கேஸ்களுக்கு ஆம்புலன்ஸ் செல்லும் நேரத்தில், வேறு ஏதாவது ஒரு உண்மையான அவசர நோயாளி ஆம்புலன்ஸ் கிடைக்காமல் உயிரிழக்க நேரிடும்.
மக்களிடம் பொறுப்புடன் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு வேண்டும். ஏனெனில் நாளை 108 ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் கிடைக்காமல் பாதிக்கப்படுவது நீங்களாகவும் இருக்கலாம்..
-மருத்துவர் குழு
