கும்மிடிப்பூண்டி செப்டம்பர் 28|புரட்டாசி 18
அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்காக தீபாவளி போனஸ் வழங்க மற்றும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மின் பணியாளர்களுக்கான தனி நலவாரியம் அமைத்தல், H மின் உரிமத்திற்கான தகுதி தேர்விற்கான 5 ஆண்டுடுகள் அனுபவத்தை மூன்று ஆண்டுகளாக குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நேற்று 28.09.2025 நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதி 1 & 2 கிளை மற்றும் வில்லிவாக்கம் கிளை நிர்வாகிகள் போன்றோருடன் உறுப்பினர்கள் 100 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் திரு மாயாண்டி அவர்கள் பேசுகையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு தீபாவளி போனஸ் வழங்கவும் அமைப்பசாரா மின் பணியாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திடவும் H மின் உரிமம் தகுதி தர்விற்கு 5ஆண்டு அனுபவத்தை 3 ஆண்டாக குறைத்து தர வேண்டும் என வலியுறுத்தினார்.
- அய்யனார் தகவல் தொழில்நுட்ப செயலாளர்.



