Type Here to Get Search Results !

தருமபுரி ஏரியூரில் உலக மருந்தாளுர்கள் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம்

Arun Kumar J

 தருமபுரி ஏரியூர் செப்டம்பர் 26|புரட்டாசி 10



தமிழ்நாடு அனைத்துப் பதிவு பெற்ற மருந்தாளுநர்கள் நலச் சங்கம் மற்றும் ஏரியூர் தமிழ்ச் சங்கம் இணைந்து மருந்தாளுர்கள் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்விற்கு கல்லூரி தாளாளர் சி.பஸ்பநாதன் தலைமை வகித்தார் கல்லூரி முதல்வர் ப.சடையன் சமூக ஆர்வலர் மா.நரசிம்மகுமார் இயற்கை ஆர்வலர் துரை முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ம.இராஜகணபதி வரவேற்புரை ஆற்றினார் ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் தகடூர் வெ.சரவணன் ஏரியூர் தமிழ்ச் சங்கம் நிறுவுநர் மற்றும் தலைவர் நா.நாகராஜ் சங்க செயலாளர் ம.அருள்குமார்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 



சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா.பழனி கருத்தரங்கை தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினார்

தமிழ்நாடு அனைத்துப் பதிவு பெற்ற மருந்தாளுநர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக் மாநில செயலாளர் கிருஷ்ணகுமார்  மாநில பொருளாளர் ராஜகணபதி  பொதுக்குழு உறுப்பினர் தண்டாயுத பாணி கோவை மண்டல பொறுப்பாளர் பிரசாந் கண்ணன் ஆகியோர் மருந்துகள் குறித்தும் மருந்துகள் பயன்படுத்தும் முறை குறித்தும் கருத்துரை வழங்கினார்கள் நிறைவாக மாநில துணைச் செயலாளர் த.சந்தோஷ்குமார் நன்றியுரை ஆற்றினார் நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.