தருமபுரி செப்டம்பர் 24 |புரட்டாசி 08

தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக மாலை 03.00 மணிக்கு அரூர் N N மஹாலில் தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பாக ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்களின் ஆணைக்கிணங்க, மண்டல பொறுப்பாளர், மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்கள் MRK.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர்.பி.பழனியப்பன் அவர்கள் முன்னிலையிலும், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர். T.சந்திரசேகர்அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது.
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி.MP அவர்கள்அரூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் Kகுமரேசன் ஆகியோர் கலந்துக்கொண்டு கருத்துரை வழங்கினார் இக்கூட்டத்தின் இறுதியாக அரூர் பேரூர் கழக செயலாளர் முல்லைரவி அவர்கள் நன்றி தெரிவித்தார் இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் Special Intensive Revision (SIR) செயல்படுத்துவதை வாக்குச்சவாடி முகவர்கள் (BLA-2) அப்பணியில் ஈடுபடுத்தி ஆய்வு செய்வது குறித்தும் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைவது குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் சட்டமன்றத் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புகள் குழு உறுப்பினர்கள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் அரூர் சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

