அக்டோபர் 09 | புரட்டாசி 23
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பட்டுக்கோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கா.விஜயன் வி.தனலட்சுமி அவர்களின் மகன் வி.அமுதன் அவர்கள் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) விளையாட்டு விடுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக கபடி வீரராக திறம்பட விளையாடி வருகின்றார். தற்போது தேனி மாவட்டத்தில் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
2025 ஆம் ஆண்டிற்காக நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை (CM Trophy) பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டியில் தேனி மாவட்டத்திற்காக இரண்டாம் இடத்தைப் பெற்று, வெள்ளி பதக்கம் மற்றும் ரூ.6,00,000 (ஆறு இலட்சம்) பரிசுத் தொகையை வென்று தேனி மாவட்டத்திற்கும் நம் தர்மபுரி மாவட்டத்திற்கும் FAKC மூக்காரெட்டிப்பட்டி கபடி அணிக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

