அக்டோபர் 21 | ஐப்பசி 04
![]() |
| மா.இராஜ கோபால் |
பாப்பிரெட்டிபட்டி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியம் ஆலாபுரம் ஊராட்சி அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூத்த முன்னோடி மா.இராஜகோபால் அவர்கள் இன்று காலை காலமானார் அவரது மறைவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வன்னியர் சங்கம் மற்றும் பட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து இணைந்து செயல்பட்ட இவர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட இராஜகோபால் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.
- கார்த்திக் பாட்டாளி மக்கள் கட்சி

