Type Here to Get Search Results !

அரூர் நகராட்சியின் முதல் ஆணையாளராக பி.சி.ஹேமலதா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Arun Kumar J

 அரூர் அக்டோபர் 06 | புரட்டாசி 20


அரூரின் பழைய பெயர் அரியூர் என்பதாகும். கல்வெட்டுகளும் இந்த ஊரை 'அரியூர்' என்றே குறிப்பிடுகின்றன. 'அரூர்' என்பது அதன் திரிபு. இந்த ஊரை, கிராம மக்களில் பலர் இன்னமும் அதன் பழைய பெயரான அரியூர் என்றே குறிப்பிடுகின்றனர். பேரூராட்சியாக இருந்த இந்த ஊர் 2024 ஜுலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்  அரூர் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.


அரூர் பேரூராட்சியிருந்து தருமபுரி 40 கி.மீ. (வழி: மொரப்பூர், ஒடசல்பட்டி). மாரண்டஹள்ளி 66 கி.மீ. (வழி: மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், வெள்ளிசந்தை) தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள பேருந்து நிலையம் 13 கி.மீ. தொலைவில் உள்ள  மொரப்பூர் ஆகும்


பேரூராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த ஊரானது அரூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தருமபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது தருமபுரி மாவட்டத்தில், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட அரூர் நகராட்சியின் முதல் ஆணையாளராக பி.சி.ஹேமலதா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியின் முதல் ஆணையாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வூரின் அமைவிடம் 12.07°N 78.5°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 350 மீட்டர் (1148 அடி) உயரத்தில் இருக்கின்றது.


இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 6,607 வீடுகளில் 25,469 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 12,543 ஆண்கள், 12,926 பெண்கள் ஆவர். அரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82% பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது ஆகும். அரூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.