அக்டோபர் 24|ஐப்பசி 07
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அக்டோபர் 5 ஆம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது அங்கு ஊசி போட்ட பிறகு குழந்தையின் கை வீங்கி நீல நிறத்தில் மாறத் தொடங்கியது இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் கைக்கு கட்டுப்போட்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.
புதிதாகப் பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டு அழுகும் நிலையில் இருப்பதால் கையை துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து பெற்றோர் நர்சிங் ஹோம் மீது புகார் அளித்துள்ளனர் இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக விசாரணை குழு அமைத்து அறிக்கை அளிக்குமாறு தலைமை மருத்துவ குழுவுக்கு காவல்துறை (CMO) கடிதம் அனுப்பியுள்ளது.

