அக்டோபர் 24|ஐப்பசி 07
தருமபுரி
தருமபுரி பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கட்டண கழிவறை செயல்பட்டு வருகிறது நகராட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்புபதாகையில் சிறுநீர் கழிக்க 1.00 ரூபாய் மலம் கழிக்க 3.00 ரூபாய் மற்றும் குளிக்க 10.00 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஆனால் பொதுமக்களிடம் சிறுநர் கழிக்க 5.00 ரூபாய் மலம் கழிக்க 5.00 ரூபாய் குளிக்க 20 ரூபாய் தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகின்றர்.
நகராட்சி நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பணம் ஏன் வசூலிக்கப்படுகின்றர் என்று பொதுமக்கள் கேட்டதற்கு இந்த கட்டணம் பாதாகை பழையது என்று கட்டணம் வசூலிப்பவர் கூறுகிறார் தருமபுரி நகராட்சிக்கு தெரிந்துதான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றர் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் விரைவில் இதற்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

