அக்டோபர் 19|ஐப்பசி 02
தீபாவளியான அக்டோபர் 20 2025 அன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 10 நிமிடங்களுக்கு ஒரு சிறப்பு ரயில்களைஅதிகரிக்கப்பட்டாலுமபயணிகளின் வசதிக்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் அக்டோபர் 21 அன்று ஞாயிற்றுக்கிழமை திட்டப்படி ரயில்கள் என அறிவுறுத்துள்ளது தீபாவளியான அக்டோபர் 20 2025 அன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 10 நிமிடங்களுக்கு ஒரு சிறப்பு ரயில்களை அறிவுறுத்தியுள்ளது பயணிகளின் வசதிக்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் அக்டோபர் 21 அன்று ஞாயிற்றுக்கிழமை திட்டப்படி ரயில்கள் என அறிவுறுத்துள்ளது
தமிழகத்தில் தீபாவளி கலை கட்ட ஆரம்பித்திருக்கிறது சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடந்த இரண்டு நாட்களாக தாம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க மக்கள் ஜிஎஸ்டி சாலையில் குவிந்துள்ளதால் மேலும் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது மக்கள் தங்களது சொந்த கார்களை வாடகைக்கு விடக் கூடாது எனவும் அவற்றை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கைவிடுத்து வருகின்றனர் மேலும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறையினர் எச்சரிக்கைவிடுத்திருக்கின்றனர்
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக தினமும் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வருகிற அக்டோபர் 20 2025 தீபாவளி தினத்தன்று சிறப்பு அட்டவணையில் மெட்ரோ இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது சென்னையில் அக்டோபர் 20 2025 அன்று காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு முறையும் அன்றைய தினம் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் தீபாவளித்தினத்தன்று வெளியே செல்ல ஏதுவாக இந்த சிறப்பு மெட்ரோ ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது மேலும் தீபாவளிக்கு அடுத்த நாள் அதாவது அக்டோபர் 21 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது ரயில்கள் அதிகரிக்கப்பட்டாலும் கட்டணத்தை பொறுத்த வரை எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது முன்பதிவில்லாத இந்த ரயிலில் சாதாரண கட்டணத்தில் மக்கள் பயணிக்க முடியும் இந்த நிலையில் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது பலரும் போட்டி போட்டுக்கொண்டு ரயிலில் ஏறும் நிலையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, காவல்துறையினர் பயணிகளை வரிசையில் நிற்க வைத்து ரயிலில் ஏற வைக்கின்றனர் இந்த நிலையில் இதுவரை 2 லட்சம் பயணிகள் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது சென்னையில் இருந்து மதுரை மார்க்கமாக 4 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது மதுரை மட்டுமல்லாமல் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இந்த ரயில்களை பயன்படுத்திக்கொள்ளலாம். சிறப்பு ரயில்களில் மக்கள் தொங்கியபடி செல்லும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

