அக்டோபர் 19|ஐப்பசி 02
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மா பூங்கா எதிரில் காமராஜர் நகரில் பொதுமக்கள் செல்லும் வழியில் தனியார் கேபிள் நிறுவனம் கேபிள் ஒயர் பதிக்க பள்ளம் தோண்டி கேபிள் ஒயர் பதித்தனர் அவ்வாறு தோண்டிய பள்ளம் சரியாக முடப்படவில்லை என்று கூறப்படுகிறது நேற்று பொழிந்த மழையினால் சாலையில் தண்ணீர் தேங்கியது வழக்கம் போல அவ்வழியாக சென்ற பள்ளி மாணவனின் கால் அக்குழியில் சிக்கிக்கொண்டது பள்ளி மாணவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர் அரை மணிநேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவனின் கால் காயங்கள் இன்றி வெளியே எடுக்கப்பட்டது சிலரின் கவனக்குறைவால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

