அக்டோபர் 12|புரட்டாசி 26
கடந்த மூன்று மாதங்களாக நிரந்தர கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால் எருமை மாட்டை இறைவனாக கருதி மனு அளித்து வழிபட்ட இளைஞரால் இளநீர் குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட இளநீர் குன்றம் கிராமத்திற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டார் பின்பு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கூறியதால் கிராம நிர்வாக அலுவலர் வேறொரு கிராமத்திற்கு மாற்றப்பட்டார் இதனால் இளநீர் குன்றம் மற்றும் கே நீர் குன்றம் இரண்டு கிராமங்களும் கிராம நிர்வாக அலுவலர் இல்லாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளானது இதுகுறித்து வட்டாட்சியர் முதல் கோட்டாட்சியர் வரை அனைவரிடமும் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமிக்க கோரி மனு அளித்தும் எந்த பயனும் இல்லை.
எனவே இன்று நடைபெற்ற கிராம சபையில் பொதுமக்கள் விவசாயிகள் என அனைவரும் கிராம சபையில் பங்கேற்றபோது வளர்ச்சித் துறை தவிர்த்து வேறு எந்த துறை சார்ந்த அலுவலர்களும் கிராம சபையில் பங்கேற்கவில்லை இதனைக் கண்டித்து விவசாயிகள் ஒன்று கூடி அனைத்து உயிர்களையும் எடுக்கக்கூடிய இறைவனாக கருதும் எருமைப்பாட்டை வழிபட்டு மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரி வேண்டினார் இச்சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு வருவாய் கிராமங்களுக்கும் நிரந்தர கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணியமர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றனர்


