கரூர அக்டோபர் 07 | புரட்டாசி 21
கரூர் புதிய பேருந்து நிலையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டிற்கு வந்ததையடுத்து பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கரூர் மாநகராட்சி, திருமாநிலையூர் கிராமம் கருப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 12.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு திங்கள்கிழமை காலை 6.00 மணி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

