அக்டோபர் 19 | ஐப்பசி 02
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் நடூரில் இருந்து கருப்பராயன் நகர் செல்லும் பாதையில் இறச்சி கழிவுகளை கொட்டியுள்ளார்கள் மிகுந்த துர்நாற்றத்துடன் சாலையில் கிடக்கிறது இந்த நகரில் உள்ள பள்ளி குழந்தைகள் பொதுமக்கள் அனைவரும் இந்த பாதையை தான் பயன்படுத்துகின்றனர் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அரசியல்வாதிகள் மக்களை தேடி வருகின்றனர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சொத்து சேர்பதிலேயே குறியாக உள்ளனர் ஆனால் வாக்களித்த மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர் எத்தனை கட்சிகள் ஆட்சி செய்தாலும் இதுபோனற காட்சிகள் மாறுவதில்லை இங்கு அழுகிய நிலையில் உள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் நோய் தொற்றுகளுக்கு ஆளாகின்றனர் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியாளர்கள் துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுத்து இக் குப்பைகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.


