நவம்பர் 06|ஐப்பசி 20
நம்ம மெரினாவில் "பனைமர பசுமைப் பாதை"
தமிழ்நாடு மாநில மரமான பனை மரங்களை வளர்க்கும் முயற்சியில் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு தமிழ்நாடு அரசுடன் இணைந்து முன்னெடுத்த பனை விதைகள் நடும் நெடும் பணியில் கடந்த 2 மாதத்தில் 1 கோடி 17 இலட்சம் விதைகள் மண்ணில் தமிழ்நாடு அரசு, தொண்டு நிறுவனங்கள் உதவியில் விதைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் உதவி ( udhavi.app/panai ) செயலியில் geotag செய்யப்பட்டது தான் இதன் சிறப்பு.
இன்று சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து "பனைமர பசுமைப் பாதை" உருவாக்கும் நோக்கில் பனை விதைகள் 5000 நடவு ஏற்பாடு செய்யப்பட்டது.
சமூக சேவகர் மற்றும் நடிகரான ஆரி அர்ஜூனன், அறந்தாங்கி நிஷா, KPY நண்பர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் குறிப்பாக குழந்தைகளுடன் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து விதைகளை விதைத்தனர்.
பனை விதைப்போம்! பெறுவோம்
- தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு


