தருமபுரி
மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். குறிப்பாக புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கும், மக்களுக்கும் தட்டணுக்கள் தானமும் இரத்த தானமும் அவசர தேவையாக தமிழக முழுவதும் வழங்கி வருகின்றனர். புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு தலைமுடி செய்ய கூந்தல் தானம் விழிப்புணர்வை தருமபுரி மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தருமபுரியை சேர்ந்த தம்பதியர் ஸ்ரீதர் கோகிலா அவர்களின் எட்டு வயது மகள் கவிநயா அவர்கள் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கினார், இவர் தருமபுரி டான் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தருமபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்த சத்யன் மனைவி லிங்கப்ரியா அவர்களும் கூந்தல் தானம் வழங்கினார்கள். டான் பள்ளி நிர்வாகத்திற்கும், அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறோம். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், தன்னார்வலர்கள் கணேஷ், அம்பிகா ஆகியோர் உடன் இருந்தனர்.



