'நவம்பர் 29|கார்த்திகை 13
தருமபுரி
"தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, சொர்ணம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுனில்குமார்(18) த/பெ நந்தகுமார், மற்றும் அதே ஊரை சேர்ந்த முருகன்(20) த/பெ ராஜீவ்காந்தி ஆகிய இருவரும் 26.11.2025 அன்று மாலை நந்தகுமாருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக பாலக்கோடு செல்வதாக சொல்லிவிட்டு சென்றவர்கள் சிக்காரதனஅள்ளி பாலம் அருகில் அடிப்பட்டு கிடப்பதாக சுனில்குமாரின் தந்தை நந்தகுமாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து தனது உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சுனில்குமார் மற்றும் முருகன் ஆகியோர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
பிறகு இருவரின் பிரேதத்தையும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மேற்படி இருவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக நந்தகுமார் கொடுத்த புகாரின் பாலக்கோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே உண்மைத்தன்மை அறியாமல், புலன் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக தவறான தகவல்களை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது."
மேலும் செய்திகளுக்கு news.tnebatu.com என்ற செய்தி இணையதளத்தில் பார்வையிடவும்.

