Type Here to Get Search Results !

அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காலியாக உள்ள நிரந்தர அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

Arun Kumar J

 நவம்பர் 30|கார்த்திகை 14


TNRD Recruitment 2025 Apply Link: அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காலியாக உள்ள நிரந்தர அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு ஆண்கள், பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

TNRD Recruitment 2025 Apply Link
TNRD Recruitment 2025 Apply Link


 முக்கிய வேலைவாய்ப்பு விவரங்கள்

  • நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, அரியலூர் மாவட்டம்

  • வேலை வகை: தமிழ்நாடு நிரந்தர அரசுப் பணி

  • பணியிடம்:தா. பழூர் ஊராட்சி ஒன்றியம், அரியலூர் மாவட்டம்

  • பதவியின் பெயர்: ஈப்பு ஓட்டுனர் (Jeep Driver)

  • மொத்த காலியிடங்கள்: 01

  • தேர்வு முறை: நேர்காணல் (எழுத்துத் தேர்வு இல்லை)

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 4, 2025 (மாலை 5.45 மணி வரை) 


 சம்பளம் மற்றும் வயது வரம்பு

  • சம்பள விவரம் (Basic Pay): மாதம் ₹19,500 முதல் ₹71,900 வரை.

  • சலுகைகள்: அடிப்படை சம்பளத்துடன் பிற அரசுப் படிகளும் (Allowances) வழங்கப்படும். முதல் மாத ஊதியம் ₹25,000-க்கும் அதிகமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது 

  • வயது வரம்பு (17.02.2025 நிலவரப்படி): 18 வயது முதல் 42 வயது வரை இருக்க வேண்டும்


 கல்வி மற்றும் பிற தகுதிகள்

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்:


  • கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கு மேலான கல்வித் தகுதிகள் (10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ) படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

  • ஓட்டுநர் உரிமம்: மோட்டார் வாகனச் சட்டப்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் (Valid Driving License) வைத்திருக்க வேண்டும் 

  • அனுபவம்: ஓட்டுநர் பணியில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்


 விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், ஆஃப்லைன் (Offline) முறையில் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  1. விண்ணப்பப் படிவம்: விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள அனைத்துக் காலங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் 

  2. விண்ணப்பக் கட்டணம்: ₹50/- கட்டணத்தை “Commissioner, Panchayat Union, T. Palur” என்ற பெயரில் வரைவோலையாக (Demand Draft – DD) எடுத்து, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்

  3. ஆவணங்கள்:

    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.

    • கல்வித் தகுதிச் சான்றுகள், ஜாதிச் சான்று, ஓட்டுநர் உரிமம், அனுபவச் சான்று ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட (Self-Attested) நகல்கள் அனைத்தையும் இணைக்க வேண்டும்

    • நேர்காணல் அழைப்புக்காக, 10 இன்ச் x 4 இன்ச் அளவுள்ள அஞ்சல் உறையில் உங்களது முழு முகவரியை எழுதி, அத்துடன் அஞ்சல் தலை ஒட்டி (Postal Stamp), விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் 

  4. விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரில் அல்லது விரைவு அஞ்சல் (Speed Post) மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் 

ஆணையாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தா. பலூர், அரியலூர் மாவட்டம், பின்கோடு 612904 

குறிப்பு: விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான இடம் மற்றும் தேதி குறித்த தகவல் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் நேர்காணலுக்குச் செல்பவர்கள் அசல் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

Official Website LinkCLICK HERE
Notification LinkCLICK HERE
Apply LinkCLICK HERE

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.