Type Here to Get Search Results !

பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு.. நண்பர்களுக்குள் வந்த சண்டை.. கொண்று தலையை வெட்டி எடுத்த கொடூரம்..! மதுரையில் பரபரப்பு

Arun Kumar J

 நவம்பர் 30|கார்த்திகை 14




மதுரை



மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி கிராமத்தைச் சேர்ந்த தான் பரமசிவம் -லட்சுமி தம்பதியரின் மகன் 30 வயதுடைய மணிகண்டன். இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் அவியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அப்போது மணிகண்டனுக்கு உடன் பணிபுரியும் கொக்குளம் கிராமத்தை சேர்ந்த 27 வயதுடைய பாரதிராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நண்பர்களாக மாறி ஒன்றாக சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. அவ்வபோது வெளியில் செல்லும் இருவரும் பணத்திற்கு கணக்குப் பார்த்துக் கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து செலவழித்து வந்திருக்கின்றனர்.



மேலும் பாரதிராஜாவும், மணிகண்டனும் பல்வேறு திருமணமான பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தீடிரென இருவருக்கும் இடையே கருது வேறுபாடு ஏற்பட்டு அது பணம் கொடுங்கள் வாங்கல் பிரச்சனையாக முற்றியுள்ளது. இதன் காரணமாக பாரதிராஜா மணிகண்டனிடம், அவருக்கு செலவு செய்த பணத்தை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. எனவே இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.




இந்நிலையில் மணிகண்டனுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண்ணிடம் பாரதிராஜா தொடர்பு வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த மணிகண்டன் பாரதிராஜாவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். மேலும் பார்க்கும் இடத்தில் எல்லாம் இது குறித்து பேசி அவமானப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த பாரதிராஜா, மணிகண்டனை கொல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த நவ. 7ம் தேதி இரவு மணிகண்டனை மது அருந்த அழைத்து ஆவியூர் தனியார் நிறுவனம் எதிரே ஒரு காட்டுப் பகுதியில் மணிகண்டன் மற்றும் பாரதிராஜா மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.



அப்போது மணிகண்டன் மீண்டும் தனது நண்பனிடம் அந்த பெண்ணை குறித்து பேசி தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது பாரதிராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக தாக்கி கொண்று தலையை துண்டித்துள்ளார். பின் அவரது உடலை பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்களான விக்னேஸ்வரன், மதன்ராஜ் ஆகியோர் மதுரை மாவட்டம், கூடக்கோவில் அருகே T.கொக்குளம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் அருகே வீசி சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவியூர் மற்றும் கூடக்கோவில் காவல்துறையினர் காணாமல் போன மணிகண்டனின் உடலை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கொக்குளம் பாலத்திற்கு அடியில் இருந்து மீட்டனர்.



ஆனால் தலை கிடைக்காத நிலையில் மணிகண்டனை கொலை செய்த பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்களான விக்னேஸ்வரன், மதன்ராஜ் ஆகையோரை ஆவியூர் போலீசார் கைது செய்து கொலை செய்து தலையை எந்த இடத்தில் போட்டீர்கள் என்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொக்குளம் தரைப்பாலம் அருகே தலையை போட்டு அதன் மீது கல் வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். மேலும் மணிகண்டன் உடல் போடப்பட்ட பகுதியில் துர்நாற்றம் வீசிவது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் அப்பகுதியில் கோழி கழிவு மற்றும் இறந்து போன நாய் ஒன்றை போட்டுள்ளனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.