Type Here to Get Search Results !

Traffic Diversion: கார்த்திகை தீபம் திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது - புதிய வழித்தடங்கள் இதோ!

Arun Kumar J

 நவம்பர் 30| கார்த்திகை 14




திருவண்ணாமலை 


வெளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் (HMV - லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள்) மற்றும் இலகுரக வாகனங்கள் (LMV - கார்,வேன் உள்ளிட்ட வாகனங்கள்) 02.12.2025 காலை 08.00 மணி முதல் 05.12.2025 காலை 06.00 மணி வரை திருவண்ணாமலை வழியாக வந்து வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


மாற்றப் பாதைகளில் செல்வதற்கான கீழ் காணும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. பெங்களூரு, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர் --- விழுப்புரம், கடலூர், புதுச்சேரி


பெங்களூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களில் இருந்து விழுப்புரம், கடலூர்,புதுச்சேரி, திண்டிவனம் மார்க்கமாக வெல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான பர்கூர் – வாணியம்பாடி – வேலூர் – ஆற்காடு – வெய்யாறு - வந்தவாசி வழியாக செல்லலாம்.





மேற்படி வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை. 

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் வழித்தடங்களிலிருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு மார்க்கமாக வெல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாலையான வந்தவாசி – வெய்யாறு – ஆற்காடு – வேலூர் – வாணியம்பாடி –பர்கூர் வழியாக வெல்லவும்.



மேற்படி வாகனங்கள் வேட்டவலம் / செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை. வழியாக செல்ல அனுமதி இல்லை.

திருப்பதி, கே.ஜி.எப், வேலூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் திருச்சி மார்க்கமாக வெல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாலையான வேலூர் – ஆற்காடு – செய்யாறு –வந்தவாசி வழியாக செல்ல அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.


மேற்படி வாகனங்கள் கண்ணமங்கலம், போளூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி, புதுச்சேரி, வழித்தடங்களில் இருந்து திருப்பதி, கே.ஜி.எப், வேலூர் மார்க்கமாக வெல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாலையான வந்தவாசி - செய்யார் - ஆற்காடு – வேலூர் வழியாக செல்லவும்.



மேற்படி வாகனங்கள் வேட்டவலம் / செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.


பெங்களூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விருதாச்சலம், சிதம்பரம், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்று பாதையான தர்மபுரி – தோப்பூர் – சேலம்;-வாழப்பாடி – ஆத்தூர் வழியாக செல்ல அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.



மேற்படி வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக செல்ல அனுமதி இல்லை.

விருதாச்சலம், சிதம்பரம், நாகப்பட்டினம், உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து பெங்களூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மார்க்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாலையான உளுந்தூர்பேட்டை, ஆத்தூர் – வாழப்பாடி – சேலம் – தொப்பூர்- தர்மபுரி வழியாக செல்ல அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.


மேற்படி வாகனங்கள் திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, சங்கராபுரம்கிருஷ்ணகிரி மலை வழியாக செல்ல அனுமதி இல்லை என திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.