Type Here to Get Search Results !

தருமபுரியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது

Arun Kumar J

நவம்பர் 24|கார்த்திகை 08




தருமபுரி 


தருமபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட மகளிர் அதிகாரம் மையம், ஒருங்கிணைந்த சேவை மையம், மை தருமபுரி அறக்கட்டளை இணைந்து தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம் மற்றும் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை அதிகரித்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், பொது மக்கள் ஆகியோரிடம் குழந்தை திருமணம் பற்றிய நாடகம், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, நகர பேருந்து நிலையம் முதல் நான்கு ரோடு வரை விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்ட சமூக நல அலுவலர் ஆ.கலாவதி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம.செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். நகர காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் அவர்கள் பேரணியை தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மை தருமபுரி தொண்டு நிறுவனம் மற்றும் தருமபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள் மூலம் இணைந்து தருமபுரி வட்டாரத்தில் நடைப்பெற்றது.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.