நவம்பர் 12 | ஐப்பசி 26
கள்ளக்குறிச்சி
இன்று(12.11.2025) கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி திருத்தம், தொலைபேசி எண் திருத்தம் மற்றும் கைரேகை, கண்விழி திருத்தங்களுக்கு பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை சில வருடங்களாக இருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு, சங்கடங்கள் இல்லாமல் பல இடங்களில் இந்த சேவை இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் மக்கள் அவதிக்குள்ளாவதையும் அதாவது சிரமம் இல்லாமல் சேவைகளைப் பெறவும் அரசு நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

