நவம்பர் 12|ஐப்பசி 26
தருமபுரி
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் 5 சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 04.11.2025-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 12,85,432 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு 1501 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது. அப்படிவங்களை வாக்காளர்கள் அவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

