நவம்பர் 13|ஐப்பசி 27
அரூர்
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திமுக சார்பில் 13.11.2025 காலை 9.30 மணிக்கு அரூர் NN மஹால் திருமண மண்டபத்தில்வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2)-க்கு "சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (S.I.R) பயிற்சி கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர்கள் P.பழனியப்பன் அவர்கள் அறிக்கை! மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதப்படி, வடக்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வ.வேலு அவர்கள்மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்கள் MRK.பன்னீர்செல்வம் ஆகியோர்தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதியில் உள்ள தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள்(BLA-2) ஆகியோர்களுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (S.I.R) தொடர்பாக விளக்கி பயிற்சி வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்கள் அதுசமயம் தருமபுரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர்கள், வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள்,பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள்,மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள்(BLA-2) அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு சிறப்பிக்க மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.பழனியப்பன் அழைப்பு விடுத்துள்ளார்

