Type Here to Get Search Results !

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பதிவு செய்வதை அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தொடங்கிட மாவட்ட ஆட்சியர் மு.அருணா அவர்கள் உதவிட வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Arun Kumar J

 நவம்பர் 23|கார்த்திகை 07




புதுக்கோட்டை 


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்  பதிவு செய்யும் அலுவலகம் போன்று அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தொடங்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், திருமயம், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, பொன்னமராவதி, விராலிமலை, இலுப்பூர், குளத்தூர், மணமேல்குடி, ஆலங்குடி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்தந்த பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து பெற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு வர வேண்டியதாக இருப்பதாகவும்.அப்படி பதிவு செய்ய வந்தாலும் ஒரு நாள் முழுவதும் காத்திருந்து பல்வேறு இன்னல்களுக்கு பின்பு பதிவு செய்ய வேண்டிய சூழல் உள்ளதாகவும்.மாவட்ட ஆட்சியர் மு.அருணா அவர்கள் தலையிட்டு புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகா அலுவலகத்திலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பதிவு செய்யும் வசதியினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அல்லது அந்தந்த தாலுகா அலுவலகத்தில் வாரத்தில் ஒரு நாள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் மு.அருணா அவர்கள் ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்கள்,சமுக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


- இரா.பாஸ்கர்

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.