நவம்பர் 23|கார்த்திகை 07
தருமபுரி
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர்மபுரி மாவட்டத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் உயர் சிகிச்சைக்காக வருகின்றனர். அவ்வாறு வரும் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கும், வேறு மாவட்டத்திற்கும் செல்வதற்காக ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது. அதே போன்று நேற்று தாய்,மகன் விபத்தில் காயம் அடைந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்துள்ளனர். மகனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக தாய் உட்பட இரண்டு பேரையும் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என முடிவு செய்துள்ளனர். அதனால் அருகில் உள்ள ஆம்புலன்ஸ்கள் நிற்கும் இடத்திற்கு சென்று பெங்களூரில் உள்ள ராமையா மருத்துவமனைக்கு இரண்டு நபர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் நாங்கள் பத்திரமாக இரண்டு நபர்களையும் அழைத்துச் செல்கிறோம் என்றும் அதற்கு 15000 முதல் 16000 வாடகை வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் வாடகை அதிகமாக உள்ளது தர்மபுரிக்கு வெளியில் உள்ள ஆம்புலன்ஸ்கள் 12,000 க்கு வருகிறார்கள் நீங்கள் ஏன் அதிகமாக கூறுகின்றார்கள் என நோயாளியின் உறவினர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் வெளியில் இருந்து ஆம்புலன்ஸ் உள்ளே வர அனுமதி கிடையாது. இங்கு ஆம்புலன்ஸ்க்கு என சங்கம் உள்ளது, அந்த சங்கத்தின் மூலம் தான் ரூட் ஆம்புலன்ஸ் வரும் வேறு ஆம்புலன்ஸை நாங்கள் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என திமிராக கூறியுள்ளனர். இதனால் இறுதியாக பெங்களூரில் உள்ள ராமையா மருத்துவமனைக்கு இரண்டு நபர்களை அழைத்துச் செல்வதற்காக 13,000 வாடகை பேசி முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு காயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் செய்த பிறகு வெளியில் வந்தவுடன் வாடகை பேசி வந்த ஆம்புலன்ஸ் அவர்களை ஏற்றவில்லை. ஏன் அவர்களை ஏற்ற வரவில்லை என கேட்டால் நாங்கள் பேசிய நபருக்கு பதிலாக, வேறு ஒருவர் ஆம்புலன்ஸை எடுத்து வந்த நிலையில் வாடகை மிகவும் குறைவாக உள்ளது, என் வண்டிக்கு அவன் யாரு என் வண்டிக்கு வாடகை முடிவு பண்றது 16000 ரூயாய் வாடகை வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஏற்கனவே பேசிய நபரை தொடர்பு கொண்ட போது அவர் மொபைலை எடுக்கவில்லை.
அதன் பிறகு காயமடைந்தவர்கள் வெளியே வந்த நிலையில் வேறு வழியின்றி ஆம்புலன்ஸில் ஏற்றி உள்ளனர். ஆனால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஏற்றும் பொழுது அந்த ஆம்புலன்ஸ் சுகாதாரமற்ற நிலையில் குப்பை, கூலங்கள் இருந்தது. இரண்டு நபர்களை ஆம்புலன்ஸில் ஏற்றிய பிறகு நெசவர் காலனி அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நிறுத்தி உள்ளனர். ஏன் இங்கு நிறுத்தி உள்ளீர்கள் என கேட்டதற்கு மற்றொரு ஆம்புலன்ஸ் வருகிறது அதில் ஏற்ற வேண்டும் என கூறியுள்ளனர். காயத்தால் அவதிப்பட்டவர்களை மீண்டும் மற்றொரு ஆம்புலன்ஸில் ஏற்றிய பிறகு மீண்டும் எங்கு செல்ல வேண்டும் என ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்டுள்ளார். அதற்கு நோயாளிகளின் உறவினர் பெங்களூர் ராமையா மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ன கூறியுள்ளார். அங்கு எல்லாம் செல்ல முடியாது நாராயணா மருத்துவமனைக்கு நான் செல்ல வேண்டும் அப்படித்தான் வாடகை பேசி உள்ளது, ராமையா மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டல் தோனியில் கூறியுள்ளனர். வேறு வழி இல்லாமல்,உறவினர்களை நீங்கள் கேட்கும் பணத்தை கொடுக்கிறோம் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட பின் ஆம்புலன்ஸை ஓட்டுநர்கள் எடுத்துச் சென்றனர்.
தர்மபுரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக செல்வதற்காக வாடகை ஆம்புலன்ஸ் எடுப்பதற்கு சென்றால் மட்டுமே போதும். அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிலர் சங்கத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் மட்டும்தான் உள்ளே வரும் வேறு ஆம்புலன்ஸ் உள்ளே வராது எனக் கூறி அதிக வாடகை வசூலில் ஈடுபடுகின்றனர். இது பற்றி அவர்கள் கூறும் சங்கத் தலைவர் சித்தன் அவரிடம் புகார் தெரிவித்ததற்கு அவர்கள் அந்த வாடையில்தான் செல்வார்கள், வேணுமென்றால் ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறங்கிக் கொள்ளுங்கள் என அலட்சியமாக கூறியுள்ளார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்த பிறகு நெசவர் காலனி தனியார் பெட்ரோல் பங்கில் நிறுத்திய பிறகு எப்படி பாதிக்கப்பட்ட நபர்கள் கீழே இறங்கிச் செல்ல முடியும். இந்த மாதிரியான சூழ்நிலைகளை உருவாக்கி கூடுதலாக பணத்தைப் பறிக்கும் நோக்கத்திற்காக தர்மபுரி ஆம்புலன்ஸ் சங்கம் என்ற பெயரில் சில ஓட்டுனர்கள் குண்டார்கள் போன்று செயல்படுவது மற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு கெட்ட பெயரை வாங்கித் தருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நோயாளிகளை ஏற்றும் சில ஆம்புலன்ஸ்கள் சுகாதாரமற்ற நிலையில் குப்பை, கூலங்களாகவும் உள்ளது.
உயிர்களை காப்பாற்றுவதற்காக மனிதநேயத்துடன் பல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்று பணத்திற்காக மட்டுமே ஆம்புலன்ஸ்களை ஓட்டும் சிலரால் மற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பெயருக்கு கலகம் ஏற்படுகின்றது. மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு செய்தி வாயிலாக கோரிக்கை வைக்கின்றனர்.

