Type Here to Get Search Results !

தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2025-26 குறித்த முக்கியத் தகவல்கள் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது

Arun Kumar J

நவம்பர் 02|ஐப்பசி 16




கல்வித்துறை


தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டம் (RTE) 2009-ன் கீழ், 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான தனியார் பள்ளிகளில் 25% இலவச மாணவர் சேர்க்கையானது பொதுவாக அக்டோபர் 9, 2025 அன்று தொடங்கி அக்டோபர் 17, 2025 அன்றுமுடிவடைந்தது இதில் சிறுபான்மை அல்லாத அனைத்துத் தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் (LKG அல்லது 1 ஆம் வகுப்பு) 25% இடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டது.


தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இந்த ஆண்டு RTE மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை இணையதளம் வழியாக நேரடியாகச் சமர்ப்பிக்க முடியாது மாற்றாக பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி, அவர்கள் மூலம் EMIS ID வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும் என்றுஅறிவுறுத்தியிருந்தது.


புதிய விதிமுறைகளளின்‌ படி இந்த ஆண்டு, ஏற்கனவே பள்ளியில் சேர்ந்த மாணவர்களை மட்டுமே RTE ஒதுக்கீட்டின் கீழ் முறைப்படுத்த (Regularize) ஒரு 10 நாள் ஆன்லைன் சாளரம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த ஆண்டு RTE சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 7 ஆயிரத்து 717 தனியார் பள்ளிகளில் 70 ஆயிரத்து 449 மாணவர்கள்சேர்க்கப்பட்டுள்ளனர் கடந்த ஆண்டு 71 ஆயிரத்து 398 மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


- பள்ளி கல்வித்துறை 

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.