நவம்பர் 08|ஐப்பசி 23
தஞ்சாவூர்
தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஊராட்சி ஒன்றியம் திருகாட்டுப்பள்ளி பகுதியில் எலக்ட்ரீசியன் சந்திப்பு செயல்விளக்க கூட்டம் கடந்த 02.11.2025 அன்று SPS திருமண பூங்காவில் நடத்தினர். இக்கூட்டத்தில் TNETA தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் திரு.செல்லத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திரு.பாலமுருகன் முன்னிலை, மாவட்ட து.தலைவர் திரு.புவனேசன் மற்றும் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய கிளை பகுதி2 நிர்வாகிகள் திரு.ஐயப்பன், திரு.பாலசந்தர் மற்றும் திரு.சுரேஷ்குமார் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக TNETA திருச்சி மாவட்ட அமைப்பு செயலாளர் திரு.ஜெகநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
திருவையாறு ஊராட்சி ஒன்றிய கிளை பகுதி சார்ந்த அமைப்பு சாரா மின் பணியாளர்கள் 50-ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். TNETA தொழிற்சங்கத்தின் வழிமுறைகள், பலன்கள்,நலவாரிய பயன்பாடு, ஆபத்தான மின் பணி செய்யும் நாம் பாதுகாப்புடன் பணி செய்வதற்கான வழிமுறைகளை போன்ற தகவல்களை தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.
இவ்விழாவில் EB உரிமம் பெற்ற திரு ஜம்புலிங்கம் மற்றும் விஜயகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வருகை புரிந்த அனைவருக்கும் மாவட்ட செயலாளர் திரு செல்லத்துரை தலைமை தாங்கினார்.


