நவம்பர் 26|கார்த்திகை 09
கள்ளக்குறிச்சி
தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி கிளை யில் அமைப்பு சாரா மின் பணியாளர்களுக்கு நலவாரிய பதிவு முகாம் கடந்த 09.11.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை தியாகதுர்கம் பகுதி பெரியசாமி எலக்ட்ரிகல் சொல்யூஷன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. TNETA மாவட்ட தலைவர் திரு.சிவசங்கர் அவர்கள் தலைமை தாங்கி முகாமினை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் திரு மகேந்திரன், து.செயலாளர் திரு முன்னிலை வகித்தனர். TNETA கள்ளக்குறிச்சி கிளை செயலாளர் திரு வெங்கடாசலபதி வரவேற்புரை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி கிளையின் மாதாந்திர கூட்டம் மற்றும் அரசு நலவாரிய பதிவு முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த 50மேற்பட்ட அமைப்பு சாரா மின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் அரசு நலவாரிய பதிவு புதியதாக 15க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்தனர். ஏற்கனவே பதிவு செய்த உறுப்பினர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கண் கண்ணாடி உதவி தொகை போன்றவை க்கு உறுப்பினர்கள் விண்ணப்பித்தனர்.
இவ்விழாவில் TNETA உறுப்பினர்களுக்கு தொழிற்சங்கத்தின் அடையாள அட்டை மற்றும் அரசு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் திரு மகேந்திரன் இறுதியாக நன்றியுரை வழங்கி நிறைவு செய்தார்


