Type Here to Get Search Results !

தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் மின்வாரிய அலுவலகத்தில், விவசாய இலவச மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவதற்காக ரூ.7,000 லஞ்சம் வாங்கிய அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.

Arun Kumar J

 நவம்பர் 26|கார்த்திகை 10


தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் மின்வாரிய அலுவலகத்தில், விவசாய இலவச மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவதற்காக ரூ.7,000 லஞ்சம் வாங்கிய அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.





வி.கே.புதூர் தாலுகா, கீழவீராணம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணேஷ். இவர் தனது தந்தையின் பெயரில் உள்ள நிலத்திற்கு 2020-ம் ஆண்டு இலவச விவசாய மின் இணைப்பு பெற்றிருந்தார். அப்போது மின்கம்பம் நடுவதற்கு ஏற்கனவே ரூ.24,000 பணம் செலுத்தியிருந்தார்.  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இளநிலை உதவி மின் பொறியாளர் பிரேம் ஆனந்த், செல்வகணேஷை தொடர்புகொண்டார். மின் இணைப்புக்கு மீட்டர் வைக்க வேண்டும் என்றும், அதற்கு நிலத்தின் ஆவணங்களுடன் ரூ.10,000 பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். செல்வகணேஷ் அவ்வளவு பணம் தர முடியாது எனக் கூறியபோது, ரூ.7,000 கொடுத்தால் மட்டுமே மீட்டர் வைக்க முடியும் என அதிகாரி கறாராகக் கூறியுள்ளார்.



லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகணேஷ், தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். போலீஸ் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூ.7,000 பணத்தை எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்றார். அலுவலகத்தில் இருந்த அதிகாரி பிரேம் ஆனந்த், அந்தப் பணத்தை அங்கிருந்த தனது நண்பரான கலிங்கப்பட்டியைச் சேர்ந்த துரை என்பவரிடம் கொடுக்குமாறு கூறினார். செல்வகணேஷ் பணத்தை துரையிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த டிஎஸ்பி பால்சுடர் தலைமையிலான போலீஸ் குழு இருவரையும் சுற்றி வளைத்துக் கைது செய்தது.


எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.