டிசம்பர் 22|மார்கழி 07
ஆத்தூர்
ஆளும் திராவிட மாடல் அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயரை நீக்கி அரசு போக்குவரத்து கழகம் என்று மாற்றி உள்ளது. இதனை கண்டித்து, நாம் தமிழர் உறவுகள் சார்பாக 21/12/2025 _ ஞாயிற்றுக்கிழமை அன்று ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு என்று பெயரினை அச்சடித்து பேருந்துகளில் ஒட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆத்தூர் நாம் தமிழர் கட்சி உறவுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.


