டிசம்பர் 07|கார்த்திகை 21
திருவண்ணாமலை
செய்யாறு ஊராட்சி துறை திட்ட அலுவலர் அவர்களுக்கும் டிஆர்ஓ, சப்-கலெக்டர் அவர்களுக்கும் வட்டாட்சியர் அவர்களுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் BDO அவர்களுக்கும் ஊராட்சி செயலாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கும் சமூக ஆர்வலர் குன்னவாக்கம் சேகர் தெரிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து நான்கு ஐந்து நாட்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் செய்யாறு சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருக்கிறது மற்றும் அதிக அதிகமான மழை இருந்த இடத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் பாதிப்புகள் இருந்து வருகிறது சில ஊர்களில் நேற்று இரவு ஒரு மணி அளவில் இடியுடன் கூடிய மழை அதிகமான அளவில் இருந்ததால் குறிப்பாக குண்ணவாக்கம் கிராமத்தில் இடி விழுந்து மின்சாரம் தாக்கி வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்கள் டிவி பிரிட்ஜ் மிக்ஸி அனைத்து பொருள்களும் சேதம் அடைந்துள்ளது ஆகவே தயவு செய்து செய்யாறு தாலுகாவிற்கு உட்பட்ட அனக்காவூர் ஒன்றியத்தில் உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருக்கின்ற கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி செயலாளர் அவர்கள் கிராமங்களுக்கு சென்று கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்யுமாறு ஆறுதல் கூறும்மாறும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து இந்த மழைக்காலங்களில் ஊரில் உள்ள வேலைகளை மக்களுக்கு தேவையான செயல்களை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறாக குன்னவாக்கம் சேகர் - சமூக ஆர்வலர், தேசிய சட்ட நீதி இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


