ஊத்தங்கரை அக்டோபர் 02 |புரட்டாசி 16
விஜயதசமி ஊர்வலம்....
ஊத்தங்கரை காந்தி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வேங்கடரமண சுவாமி ஆலயத்தில் இன்று (02.10.2025) விஜயதசமி சிறப்பு உற்சவம் நடைபெற்றது தொடர்ந்து சுவாமி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியின் அருளாசியைப் பெற்றனர்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் செ. இராஜேந்திரன், செயலாளர் கோ. இரவி, பொருளாளர் திலீப்சிங், தர்மகர்த்தா பெ. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


