தருமபுரி, அக்டோபர் 02 |புரட்டாசி 16
அக்டோபர் 2 தருமபுரி உதயமாகி 60 ஆண்டுகள் வைர விழா தினத்தை முன்னிட்டு தருமபுரியில் சமூக சேவை செய்து வரும் அமைப்புகள் ஒன்றிணைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமை நடத்தினர். இந்த ரத்ததான முகாமில் ஒரு அமைப்புக்கு ஒருவர் என்ற நோக்கத்தில் முகாமை இணைந்து செயல்படுத்தினர். முகாமில் வழங்கப்பட்ட ரத்தத்தை தலைசீமியா குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சை அவசர தேவைகளுக்கு உதவிட குருதி வங்கி மருத்துவரை கேட்டுக் கொண்டனர். இந்த ரத்ததான முகாமிற்கு எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார், மை தருமபுரி NGO நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், சையத் ஜாபர், தன்னார்வலர் குணசீலன், ஆதி பவுண்டேஷன் ஆதிமூலம், பசியில்லா தருமபுரி வினோத் குமார், கிராம விழிகள் அறக்கட்டளை செல்லதுரை, அப்துல் கலாம் இளைஞர் நற்பணி இயக்கம் பிரபு, உதவும் உறவுகள் அறக்கட்டளை இராமன் ஆகிய அமைப்புகள் இணைந்து இரத்ததான முகாமை ஒருங்கிணைத்தனர்.

