தருமபுரி செப்டம்பர் 22 / புரட்டாசி 06
தருமபுரி மாவட்ட நிர்வாகம் பொது நூலகத்துறை
மற்றும் தகடூர் புத்தகப் பேரவை சார்பில், 7வது
"தருமபுரி புத்தகத் திருவிழா"
வருகின்ற செப்டம்பர்- 26
முதல் அக்டோபர் -5 வரை தருமபுரி "மதுராபாய் சுந்தர்ராஜ்ராவ் திருமண மண்டபத்தில்" நடைபெறுகிறது.புத்தகத் திருவிழாவையொட்டி நாளை
23-ம் தேதி
செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் "தருமபுரி வாசிக்கிறது"
என்கிற நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில்,
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு,
மாணவர்களுடன் புத்தகம் வாசிக்க
உள்ளார்.
இதைப்போன்று
"தருமபுரி வாசிக்கிறது" நிகழ்வை நாளை காலை 10.00 மணிமுதல் 11.00 மணிவரை தருமபுரி
மாவட்டத்தில் வாய்ப்புள்ள இடங்களில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள், நூலகங்கல் என இதுபோன்று நிகழ்வுகளை நடத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
-கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் -NGO.
