அக்டோபர் 16|புரட்டாசி 30
தமிழ்நாடு,
தமிழகத்தில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு இன சுழற்சி முறையில் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தெரிவித்துள்ளது.
பதவி: கிராம ஊராட்சி செயலர்
மொத்த காலியிடங்கள்: 1,483
கடைசி தேதி: 09.11.2025
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
பொதுப் பிரிவு: 18 முதல் 32 வயது வரை
பிசி / பிசி முஸ்லிம் / எம்பிசி: 18 முதல் 34 வயது வரை
எஸ்சி / எஸ்டி: 18 முதல் 37 வயது வரை
மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் 10 ஆண்டு வயது தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவு: ₹100
எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள்: ₹50
முழு விவரங்கள் மற்றும் மாவட்ட வாரியான காலியிட பட்டியலைப் பெற:
🌐 www.tnrd.tn.gov.in




