அக்டோபர் 17|புரட்டாசி 31
கடலூர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் மக்காச்சோளம் வயலில் உரம் இடும் பணி நடைபெற்று வந்தது அப்போது இடியுடன் கூடிய கனமழை துவங்கியுள்ளது விவசாய வயலில் வேலை செய்துகொண்டிருந்த கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பாரிஜாதம் ராஜேஸ்வரி சின்னப்பொண்ணு மற்றும் கணிதா ஆகியோர் நால்வர மீதும் திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
மின்னல் தாக்கி இரு கண்களிலும் பார்வை பறிபோன நிலையில் மற்றொரு பெண் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இத்துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


