அக்டோபர் 10 | புரட்டாசி 24
பாப்பிரெட்டிபட்டி,
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளது இந்நிலையில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை மாநிலத் துணைத் தலைவர் பா.ஜெபசிங் போட்டியிட முன்வந்துள்ளார்.
பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர் அறிவிப்பு
2026 பிப்ரவரி மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கும் முன்னெடுப்பில் நாம் தமிழர் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்க செயலாளராகவும் சேவையாற்றி வரும் பா.ஜெபசிங், பாப்பிரெட்டிபட்டி தொகுதி முழுவதும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதிலும், சமூக மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு குறித்த தனது அனுபவத்தையும் மக்கள் சேவை மனப்பான்மையையும் முன்னிறுத்தி பாப்பிரெட்டிபட்டி மக்களுக்கு சேவையாற்ற தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேர்வு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக நடைபெற்று வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

