Type Here to Get Search Results !

H லைசென்ஸ் பெற வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு‌ பயிற்சி வகுப்புகள் ஏற்பாடுகள் செய்தது TNETA தொழிற்சங்கம்‌

Arun Kumar J

 அக்டோபர் 10|புரட்டாசி 24


தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம், தலைமை அலுவலகத்தில் கடந்த  30.09.2025 செவ்வாய்கிழமை அன்று அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட வயரிங் செய்யும் மின் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ள மின்கம்பி உதவியாளர் ("H") தகுதி சான்றிதழ்  தேர்விற்கான வெளியிடப்பட்டுள்ள செய்தி அடிப்படையில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 


குறைந்தபட்சம் ஐந்து வருட அனுபவத்தை  அனுபவ சான்றிதழ் உடன் தன்னகத்தே கொண்ட மின் பணியாளர்களுக்கு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் முறை  E செல்லான் கருவூலம் மூலம் பணம் கட்டும் முறை தேர்வில் கேட்கப்படும் செய்முறை  கேள்வி குறித்த பயிற்சிகளுக்கு சிறந்த பயிற்சியாளர் திரு K.R.சீனிவாசன் அவர்கள் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

மின் உரிமத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்று தகுதி சான்றிதழ் பெறுவதோடு மட்டுமல்லாமல் அதை மின் வழங்கும் வாரியத்திற்கு விண்ணப்பம் செய்து "H" மின் உரிமம் எப்படி பெறுவது மற்றும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு  மின் கம்பியாளர் ("B")  மின் உரிமம்  எப்படி பெற வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சி வவகுப்பில் 40 க்கு மேற்பட்ட மின் பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 

பயிற்சி வகுப்பை TNETA மாநில தலைவர் திரு.மாயாண்டி அவர்கள் துவக்கி வைத்து வருகை புரிந்த மின் பணியாளர்களுக்கு மின் உரிமம் பற்றிய விளக்க உரை வழங்கினார்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.