Type Here to Get Search Results !

சுத்தம் செய்யப்படாத ஒகேனக்கல் குடிநீர் தொட்டி அலட்சியம் காட்டும் வெங்கடசமுத்திரம் பஞ்சாயத்து செயலாளர் கோவிந்தராஜ்

Arun Kumar J

 அக்டோபர் 11|புரட்டாசி 25



பாப்பிரெட்டிபட்டி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரம் பஞ்சாயத்து வார்டு எண்-1 கோழிமேக்கானூர் கிராமத்தில் பொதுமக்களின் தேவைக்காக  ஒகேனக்கல் கூட்டு குடிநீர் (30,000 லிட்டர்) தொட்டி அமைக்கப்பட்டு ஊர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் கடந்த சில நாட்களாக இக் குடிநீர் தொட்டியில் இருந்து வந்த குடிநீர் குடித்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.





துர்நாற்றத்துடன் கூடிய கலங்கிய நீர், குடிநீர் குழாய்களில் வந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்ததில் இக் கடிநீர் தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து பஞ்சாயத்து செயலாளர் திரு.கோவிந்தராஜ் அவர்களை தொடர்பு கொண்ட போது சரியான பதில் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.


அரசு அதிகாரிகளின் அலட்சியத்தினால் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இப்பகுதியில் 08-130-014-150 மின் இணைப்பு எண் கொண்ட தெருவிளக்குகளும் கடந்த 4 ஆண்டுகளாக எரியவில்லை இது குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. பாப்பிரெட்டிபட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.